தேசிய சட்ட பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு, கிளாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும், 24 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில், 2025ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கிளாட் நுழைவுத்தேர்வு நடந்தது.
நாடு முழுவதும், 141 தேர்வு மையங்களில், 75,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிளாட் தேர்வில் கலந்து கொண்டனர். தமிழகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட மேற்படிப்புகளுக்கான நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவர்களை கலந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதன் கீழ், கிளாட் தேர்வில் கலந்துகொள்ளும் அரசு மாணவர்களுக்கு கட்டணம் மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று வருவதற்கான பஸ் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆர்வம் உள்ள மாணவர்கள், கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
தேர்வு முடிந்த பிறகு அரசு, தேர்வு கட்டணம், பஸ் கட்டணத்தை மாணவர் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறது.கிளாட் நுழைவுத்தேர்வுக்கான கட்டணம், 3,500 ரூபாயை அரசு பள்ளி மாணவர்கள் செலுத்தியுள்ளனர். பல பள்ளிகளில் ஏழ்மையான மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
இதேபோல், நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள், சேலத்தில், கிளாட் தேர்வை எழுதியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களை அப்பள்ளியின் பொறுப்பாசிரியர் தேர்வுக்கு அழைத்து வந்து, மீண்டும் தேர்வு முடிந்து அழைத்து சென்றுள்ளார்.
இதனால், அரசு பள்ளி மாணவர்கள், 99 சதவீதம் பேர் தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...