பெண்கள் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த
வகையில் , ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும்
' காவல் உதவி ' செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள்
செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவசர
காலங்களில் ' சிவப்பு நிற அவசரம் ' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக ,
பயனாளர் விவரம் , தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ , கட்டுப்பாட்டு
அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும் . மாணவிகள்
காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக்
கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இச்செயலியை Google Play Store , App Store இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...