தமிழ் இந்தியாவிற்கு மட்டுமே உள்ள மொழி அல்ல என மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த இளந்தமிழர் இலக்கியப்பட்டறை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பு தேவைகள் என்ற தலைப்பில் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் பேசியதாவது:
இந்தியாவுக்கு வெளியே 10 பல்கலைகளில் பாடமாக தமிழ் உள்ளது.
போலந்து நாட்டில் தமிழ் பயில்கின்றனர். தமிழ் இந்தியாவில் மட்டுமே உள்ள மொழி அல்ல. இது ஒரு பயன்பாட்டு மொழி. மொழிபெயர்ப்பு பணியில் வேலைவாய்ப்புகள் நிறையவுள்ளன. ஊடகங்களில் பதிவு செய்ய ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்தல், ஹாலிவுட் படங்கள், கார்ட்டூன் தொடர்களிலும் மொழிபெயர்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளது.
மனிதர்கள் ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த காலத்தில் மனிதர்களிடம் கல்வியை புகுத்தியது மொழிபெயர்ப்பு தான். அரசியல், மொழிப்புரட்சிகள் மொழிபெயர்ப்புக்கான தேவையை ஏற்படுத்தின. ராமாயணம், மகாபாரதம் பிறமொழி தழுவல்களாக வெளிவந்தவையே. மொழிபெயர்ப்பு என்பது சவால் தான். மூலமொழியை மொழிபெயர்த்தாலும் கருத்தியல் ரீதியான மொழிபெயர்ப்பே வெற்றிபெறுகிறது என்றார்.
நுாலை பகுத்துணர் என்ற தலைப்பில் திறனாய்வாளர் அருள்பிரகாஷ் பேசுகையில், எல்லா மொழிக்கும் தமிழ் தான் தாய்மொழியாக உள்ளது என்பதை அறிஞர் கால்டுவெல் தனது ஒப்பிலக்கணத்தில் கூறியுள்ளார். 5 வடிவங்கள் இல்லாமல் எந்த மொழியையும் எழுத முடியாது. தமிழில் மட்டுமே ஐந்து வடிவங்களும் உள்ளன என்றார்.
பொன்மாணிக்கம், லால்குடி எழில்செல்வன், சித்ராகணபதி ஆகியோர் பேசினர். மாணவர்களுக்கு இலக்கிய வினாடி வினா நடத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...