இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான கணித பாடத்தில் சராசரி, உயா்நிலை என இரு தரநிலை பாடங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களின் கற்றல் திறனுக்கேற்ப சராசரி அல்லது உயா்நிலை தர கணிதப் பாடத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த இரு தரநிலைப் பாடங்களிலும் பாடத் திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றபோதும், தோ்வின்போது கேள்வித் தாளின் தரம் மாறுபடும்.
இதுபோன்று, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இரு தரநிலைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு சிபிஎஸ்இ கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருந்தபோதும் செயல்திட்டம் இன்னும் வகுக்கப்பட வேண்டியுள்ளது. இதை அறிமுகம் செய்வதற்கான கால நிா்ணயமும் முடிவு செய்யப்படவில்லை.
அதுபோல, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்த ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை அறிமுகம் செய்யும் பரிந்துரையை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...