சாயல்குடி அருகே கடுகுச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி படிக்கட்டுகளில் அறிவியல், பார்முலாக்கள் எழுதப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு செயல்படுகிறது. 83க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு இரண்டு மாடி கட்டடத்துடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.
கட்டடத்தின் முதல் படி மற்றும் இரண்டாவது மாடிப்படிக்கு செல்லும் அனைத்து படிகளிலும் கணிதத்தில் உள்ள பார்முலாக்கள் ஒவ்வொரு படியிலும் பார்வையில் தெரியும்படி ஒட்டி வைத்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய்சிங் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:
அறிவியல் மற்றும் கணிதத்தில் உள்ள சூத்திரம், சமன்பாடுகள், குறியீடுகள் மற்றும் அளவீடுகள், அல்ஜிப்ரா உள்ளிட்டவைகளை எளிதில் மனப்பாடம் செய்வதற்கு ஏற்றபடி பார்வையில் படும்படி ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் படியில் ஏறும் போது இவ்வகையான சூத்திரங்களை மனப்பாடம் செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மதிய உணவு இடைவேளை நேரத்தில் தினமலர் நாளிதழின் பட்டம் மாணவர் இதழை ஒவ்வொரு மாணவருக்கும் வாசிப்பதற்கு கொடுக்கிறோம். இதன் மூலம் பள்ளி பாடப்புத்தகத்தையும் தாண்டி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வகையான முயற்சிக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...