ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது உண்மை தான். இந்த பணியிடங்களை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...