தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
பாரதியாரின் 143வது பிறந்தநாளான இன்று, டில்லியில் அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தொகுப்பில் பாரதி எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.
பொக்கிஷம்
இந்த தொகுப்பு ஆராய்ச்சி அறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தின் கவுரவம் மகாகவி பாரதியார். தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார். பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் அரிய பொக்கிஷம். நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பாரதியாரின் தொலைநோக்கு பார்வை தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...