தமிழக உணவு ஆணைய தலைவர் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவியில் இருந்த வாசுகி, 2023 பிப்ரவரி அப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய தலைவரை நியமிக்க, கடந்த ஆண்டு ஜனவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன; பலர் விண்ணப்பித்தும் யாரும் நியமிக்கப்படவில்லை.
மீண்டும் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு, கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியானது. அது ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த முறை அறிவிப்பு வெளியிட்ட போது, சிலர் மட்டுமே விண்ணப்பித்ததால், அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்க, மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...