வேலை
வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
எடுக்காதது ஏன் என நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்கள் குறித்து தாமாக
முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள 13 காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள 16 இடங்களுக்கு தேர்வாணயம் மூலம் தேர்வு நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...