தமிழகத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகளிடம் ஆராய்ச்சி படிப்பை ஊக்குவிக்கும் வகையில், 'தமிழக முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை - சி.எம்.ஆர்.எப்.,' வழங்கப்படுகிறது.
நோக்கங்கள்:
இத்திட்டம் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை எளிதாக்குவதோடு, கல்வித் திறனை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மாநிலத்தின் சமூக-பொருளாதார மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதையும், ஆய்வாளர்களுக்கு நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஊக்கத்தொகை விபரம்:
* கலை மற்றும் சமூக அறிவியல் சார்ந்த 60 ஆய்வாளர்கள்
* அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 60 அறிவியல் ஆய்வாளர்கள்
* அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கல்லூரிகளில் பொறியியல் துறை சார்ந்த 20 ஆய்வாளர்கள்
* உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழகத் துறைகளில் கலை, சமூக அறிவியல் மற்றும் அறிவியல் துறை சார்ந்த 20 ஆய்வாளர்கள்
* மாநில பல்கலைக்கழகங்களில் விவசாயம், கால்நடை அறிவியல், மீன்வளம், கல்வி, வளிமண்டல அறிவியல் மற்றும் கடல்சார் அறிவியல் போன்ற துறைகளில் 20 ஆய்வாளர்கள் என 2024ம் ஆண்டில் மொத்தம் 180 திறமையான ஆய்வாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கலை மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஆய்வாளர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் இதர செலவீனங்களுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பிற பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
* தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
* தமிழகத்தில் உள்ள யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
* முதுநிலைப் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வு செய்யப்படும் முறை:
டி.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சி.எம்.ஆர்.எப்., தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விபரங்களுக்கு:
சி.எம்.ஆர்.எப்., பிரிவு,
கல்லூரிக் கல்வி இயக்குநரகம்,
சைதாப்பேட்டை,
சென்னை- 600 015
தொலைபேசி:
044-24346791 / 24342104
இ-மெயில்:
cmrfdce2023@gmail.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...