முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தமிழக அரசின் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது
இப்பயிற்சி மையத்தில், 2024ம் ஆண்டு முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்ற, 216 பேரில், 22 மகளிர் மற்றும், இரு மாற்றுத்திறனாளிகள் உட்பட, 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஏழு பேர் தமிழை விருப்ப பாடமாக தேர்வு செய்தவர்கள்.
இவர்களுக்கு, வரும் 18, 19, 20ம் தேதிகளில், மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மற்றவர்களும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். கட்டணம் செலுத்த தேவையில்லை.
பங்கேற்க விரும்புபவர்கள், www.civilservice coaching.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 93457 66957 என்ற வாட்ஸாப் எண் அல்லது 044 - 24621475 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...