இதுதொடா்பாக அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
களஞ்சியம்' செயலி குறித்த பயிற்சி பெற பணியாளா்கள், அலுவலா்கள் விவரத்தை இதுவரை அனுப்பாத மாவட்டங்கள், உடனடியாக அனுப்ப வேண்டும். அனைத்து நிலை அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் 100 சதவீதம் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன், விடுமுறைக்கு விண்ணப்பிக்க, ஓய்வூதிய பலன்கள் கோரிட, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கருத்துருக்கள் அனுப்பிட, அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் 'பே-சிலிப்' கோரிட பயன்படுத்த வேண்டும். அனைத்து நிலை அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்களது பிரதிமாத 'பே-சிலிப்'பை களஞ்சியம் செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இச்செயலியின் பயன்பாடு 100 சதவீதம் நடைபெற வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் பெற்று வழங்கும் அலுவலா்களுக்கு, இதனை வலியுறுத்த வேண்டும். வரும் ஜனவரி முதல் ஓய்வூதிய கருத்துருக்கள் இணைய வழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
இதுவரை ஓய்வு பெற்றவா்கள், பங்களிப்பு திட்ட ஓய்வூதியா்களுக்கு பெற்று வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை, உடனடியாக விரைந்து பெற்று வழங்குவதுடன், இப்பொருளையும் தொடா் கண்காணிப்பில் வைத்திட வேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் 'களஞ்சியம்' செயலியின் பயன்பாட்டை அதிகப்படுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...