இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கல்லுாரி மாணவர்களுக்காக, இரண்டு வார கால இலவச சைபர் செக்யூரிட்டி பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது.
இஸ்ரோ நடத்தும் இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பை, வரும் 9ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த கல்லுாரி முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பங்கேற்கலாம்.
இணைய வழியில் தகவல்களை பாதுகாப்பது, அதில் நடக்கும் திருட்டுகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள், பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் நடக்கும் பித்தலாட்டங்கள், அவற்றிலிருந்து பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகள், பாட ரீதியாகவும், செயல் முறையாகவும் விளக்கப்பட உள்ளன. இதை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இது குறித்த தகவல்களை, https://elearning.iirs.gov.in/edusatregistration/coordinator/ என்ற இணைப்பில் அறியலாம். இதில் பங்கேற்க, https://elearning.iirs.gov.in/edusatregistration/ என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0135 - 2524130 என்ற எண்ணில் அல்லது dlp@iirs.gov.in என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...