அரசு பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல் 20 வரை மூன்று நாட்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் நாளை (19ல்) ஈரோடு வருகிறார். 20ல், ஈரோடு சோலாரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக பல்வேறு துறை அமைச்சர்கள் வந்து சென்றபடி உள்ளனர்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை, தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். எனவே இன்று, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது. காலை உணவு மேற்பார்வை செய்யும் ஆசிரியர்கள் காலை, 8:15 மணிக்குள் பள்ளிக்கு வந்து விட வேண்டும்.
பள்ளி கழிவறை சுத்தம், சுற்றுப்புற துாய்மையை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஆணைக்கல்பாளையம் பெரியார் நகர், லக்காபுரம், நகராட்சி நகர், கணபதிபாளையம் சாலையில் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாணவர் படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.
அனைத்து பதிவேடு களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள், 9:00 மணிக்குள்ளும், மாணவர்கள், 9:10 மணிக்குள்ளும் வருகை பதிவேடு முடிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் 19, 20ல் காலை 8:15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். விலையில்லா நல திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...