தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க நிறுவனங்களுக்கு டில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, டில்லி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
மேம்பட்ட தொழில்நுட்ப கற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை மாணவர்களிடம் மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கற்பிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் மேம்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஆய்வகத்தில் வன்பொருள், மென்பொருள் நிறுவப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள நிறுவனங்கள் அதற்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கலாம்.
இந்த அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் திட்ட மதிப்பீட்டை, இணை இயக்குனர் (ஐ.டி.,), கல்வி இயக்குனரகம், ஜி.என்.சி.ஐ.டி., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...