சென்னையில் அடுத்த மாதம் 9, 10ம் தேதிகளில், உமாஜின் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடக்க உள்ளது, என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சி.ஐ.ஐ., கனெக்ட் 22வது தொழில்நுட்ப மாநாடு நேற்று துவங்கியது. இரண்டு நாள் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு வழியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாநாடு துவக்க விழாவில், அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், உமாஜின் மாநாடு நடக்க உள்ளது. இதில் உலகில் உள்ள முக்கிய தொழில்நுட்ப பேச்சாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
மாநாட்டில், பெமா நிறுவனத்தின் வல்லுனர்கள், அமெரிக்க வல்லுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஸ்பேஸ் டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களும் பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், சி.ஐ.ஐ., கனெக்ட் மாநாட்டு தலைவர் மகாலிங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் மற்றும் தென் மண்டலத் தலைவர் நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...