தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். அதுகுறித்த அறிக்கையை நேற்று துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார்.
அதில், தமிழக எல்லை பகுதிகளில் உள்ள பள்ளிகளில், வேற்று மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் தெலுங்கு, கன்னடம், உருது மொழி ஆசிரியர்களுக்கும், கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மலையாள மொழி ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், முக்கிய சாலைகள், அடர் வனங்களில் உள்ள பள்ளிகளில், பாதுகாப்புக்கான சுற்றுச்சுவர் தேவைப்படுவதாகவும், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துஉள்ளார்.
நிறைய பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதால், மாணவியர் அவதிக்கு உள்ளாவதாகவும், பல மாவட்டங்களில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுபோல், 70 வகையான விஷயங்களை பட்டியலிட்டுள்ள அமைச்சர், அதற்கான காரணங்களையும், சரி செய்வதற்கான ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...