Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2024

    


திருக்குறள்: 

பால் : பொருட்பால்
 
அதிகாரம் : மருந்து

குறள் எண்:941

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள் :
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.

பழமொழி :

A true friend is the best possession.

உண்மையான நண்பனே உன்னதச் சொத்து

இரண்டொழுக்க பண்புகள் :  

  *விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும் பொழுது கவனமாக இருப்பேன்.       

*அறிமுகம் இல்லாத நபர்களோடு வெளியில் செல்ல மாட்டேன். ஆபத்தான நீர் நிலைகளில் குளிக்க போக மாட்டேன்

பொன்மொழி :

வாய்மைக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அச்சமின்மையே----ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. பூரண ஆயுள் என்பது எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது? 

விடை: 120 ஆண்டுகள். 

2. மனித முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? 

விடை: 14 எலும்புகள்.

English words & meanings :

 Singing          -      பாடுதல்

Swimming       -      நீந்துதல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 தமிழகத்தில் சில இடங்களில் முற்றும் இயற்கை முறை வேளாண்மை நடத்தப்படுகிறது. அதாவது மழை பெய்த உடன் நெல் விதை விதைத்து விடுவது அதன் பிறகு அதன் களைகள் கொல்ல எந்த மருந்தும் இயற்கை களைக் கொல்லிகள் கூட உபயோகிப்பது இல்லை. இம்முறையில் பயிர் செய்யப் படும் பயிர்கள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையில் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும்.

நீதிக்கதை

 சர்வீஸ்

பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். 

காரை பழுது பார்த்த மெக்கானிக், "டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்... நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன். அடைப்பை சரி செய்கிறேன். புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்.. நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்.. அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம், புகழ்?"

என்று கேட்டான். 

சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் "நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார் அப்போது புரியும்!" என்றார்.

அப்போது தான் மெக்கானிக் டாக்டரின் சர்வீஸ்  எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவருடைய சர்வீஸை நம்முடைய வேலையுடன் ஒப்பிடுவது எவ்வளவு தவறான விஷயம் என்றும், புரிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

23.12.2024

* போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிசம்பர் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது.

* நெல்லை சம்பவம் எதிரொலி: ‘அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு’: தமிழக டிஜிபி உத்தரவு.

* உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு.

* உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு.

* புரோ கபடி லீக்; ஜெய்ப்பூரை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற தபாங் டெல்லி.

* சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1, 602 ரன்களுடன் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்

Today's Headlines

* Transport workers' wage agreement talks to be held on December 27 and 28.

* Nellai incident: 'Armed police security in all courts': Tamil Nadu DGP orders.

* The most modern domestically manufactured Nilgiri, Surat warship handed over to the Navy.

* Ready to talk to Trump about the Ukraine ceasefire: Russian President Putin announces.

* Pro Kabaddi League; Dabang Delhi wins thrilling victory over Jaipur.

* India's Smriti Mandhana tops the list of players who have scored the most runs in a year in international competition with 1,602 runs
Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive