கடலில் உட்செலுத்தப்படும் சோனார் |
அதிகாரம் :சூது
குறள் எண்:933
உருள்ஆயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
பொருள்:ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
Never cast a clout till May be out.
கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.
இரண்டொழுக்க பண்புகள் :
*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.
*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.
பொன்மொழி :
என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் -- ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
கரிம முறைமைகளுக்கு அதிக அளவில் ஆட்கள்,[29] தேவைப்படுவார்கள். இதனால் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; ஆனால், நகர்ப்புற நுகர்வோருக்கு விலைகள் அதிகரிக்கும்.
நீதிக்கதை
சிறுவனின் செயல்
அரசர் ஒருவருக்கு திடீரென்று தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை.
யானையின் எடையை அளந்து பார்க்கக்கூடிய பெரிய தராசுகளும் இல்லை. எனவே அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யானையின் எடையை எவ்வாறு அறிவது என்று குழம்பினார்.
அப்போது ஒரு அமைச்சரின் மகனான ஒரு சிறுவன், " நான் இதன் எடையை சரியாக கணித்துச் சொல்கிறேன்"என்று கூறினான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். ஆனால் அரசர், அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம் என்று விரும்பி சம்மதித்தார்.
அந்தச் சிறுவன் அந்த யானையை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். பிறகு அங்கே இருந்த பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன் உயர்ந்த தண்ணீர் மட்டத்தை குறித்துக் கொண்டான்.
பிறகு யானையை படகிலிருந்து இறக்கிவிட்டு, பெரிய பெரிய கற்களை கொண்டு படகை நிரப்பச் செய்தான். முன்பு குறித்த குறியீடு அளவிற்கு தண்ணீரில் படகு மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டது பின்பு அரசர் இடம் அந்த கற்களை காட்டி, "இந்த கற்களின் எடைதான் யானையின் எடை" என்று கூறினான் சிறுவன்.
அனைவரும் வியந்தனர்.அவனது புத்திசாலித்தனத்தை போற்றி புகழ்ந்தனர். எல்லோரும் யானையின் எடையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தனர். அதனால் அதனுடைய எடையை கணிக்க முடியாது என்று நினைத்தனர். ஆனால் அந்த சிறுவன் யானையின் எடையை பல எடைகளின் கூட்டுத்தொகையாக பார்த்ததால் அவனால் செய்ய முடிந்தது.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...