பொன்மொழி :
தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ
பொது அறிவு :
1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?
விடை: 27
2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?
விடை: கால்சியம் பாஸ்பேட்
English words & meanings :
Proud - பெருமை
Sad - சோகம்
வேளாண்மையும் வாழ்வும் :
நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்
டிசம்பர் 05
கல்கி அவர்களின் நினைவுநாள்
கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்
நீதிக்கதை
கடல்
கடலில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று அவர் நினைத்ததை விடவே அதிகமான மீன்கள் கிடைத்தன. எனவே கடற்கரையில் அவர் "இக்கடல் பெரும் கொடையாளி" என்று எழுதினார்.
இளைஞர் ஒருவர் கடலில் முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு கரைக்கு திரும்பினார். அவர் கடற்கரையில், "இந்த கடல் ஒன்றே போதும் நான் மகிழ்ச்சியுடன் வாழ" என்று எழுதினார்.
கடற்கரையில் பந்து விளையாடி கொண்டு இருந்த சிறுவனின் பந்தை, கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த சிறுவன் கடற்கரையில், " இந்த கடல் பெரும் தொல்லை" என்று எழுதினான்.
முதிய பெண்மணி ஒருவரின் பொருட்களை கடலலை இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த பெண்மணி கடற்கரையில், " இந்த கடல் மிகவும் பேராசை கொண்டது" என்று எழுதினார்.
ஆனால் கடலோ இவர்கள் எழுதியது அனைத்தையும் அலை ஒன்றை அனுப்பி அழித்துவிட்டு சென்றது.
மனிதா! இவ்வாறு பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.
உன்னுடைய நட்பும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் எனில்,நீ பிறரின் தவறுகளை உன் மனதில் இருந்து அழித்துவிடு. வாழ்க்கை சிறக்கும்.
இன்றைய செய்திகள்
05.12.2024
*/இன்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த , இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட்டானது, நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
* ஸ்காட்லாந்து நாட்டில் கலங்கரை விளக்கத்தில் 132 வருடத்திற்கு முந்தைய பாட்டில் கிடைத்துள்ளது அதனுள் ஒரு கடிதமும் உள்ளது. பறவை இறகு மற்றும் மை மூலம் இது எழுதப்பட்டுள்ளது.
* மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
* வெம்பக்கோட்டை அகழாய்வில் மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
* இந்தியா-பூடான் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
Today's Headlines
* ISRO's PSLV-C59 rocket, which was scheduled to be launched at 4.08 pm today, has been postponed to tomorrow evening, ISRO said.
* A 132-year-old bottle containing a letter has been found in a lighthouse in Scotland. It was written in bird feathers and ink.
* 30 people have died in Malaysia and Thailand due to rain and floods.
* Beads, conch bracelets found in Vembakottai excavations
* The close friendship between India and Bhutan continues. To further strengthen this friendship, Bhutanese King Jigme Khesar Namgyal Wangchuck will arrive in India today on a two-day visit.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...