யுனைடெட் கிங்டெமில் படிக்க விரும்பும் தகுதியான இந்திய மாணவ, மாணவிகள், 'காமன்வெல்த் மாஸ்டர்ஸ்' உதவித்தொகைக்கு உடனடியாக விண்ணப்பிக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கும் இந்த உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக, யு.கே.,வில் உள்ள கல்வி நிறுவனங்களில் முழுநேர முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறலாம். இந்திய மாணவர்கள் அதிகளவில் பயன்பெறும் நோக்கில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய கல்வி அமைச்சகம் நீட்டித்துள்ளது.
தலைப்புகள்:
* வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
* சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்
* உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல்
* உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்
* பின்னடைவை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளுக்கு பதிலளிப்பது
* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்பு
தகுதிகள்:
இந்திய குடிமகனாகவும், இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் அவசியம். குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும் அல்லது குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும். வயதுவரம்பு ஏதும் இல்லை.
குறிப்பு:
ஏற்கனவே முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு காமன்வெல்த் கமிஷன் உதவித்தொகை வழங்குவதில்லை என்றபோதிலும், மாணவர்களின் நோக்கத்தின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படலாம். எம்.பி.ஏ., படிப்பிற்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
https://proposal-sakshat.samarth.edu.in எனும் மத்திய கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 30
விபரங்களுக்கு:
www.education.gov.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...