நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் பி.டெஸ்., எனும் 4 ஆண்டு இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் சேர்க்கை பெற, யு.சி.இ.இ.டி., எனும் 'டிசைன் படிப்பிற்கான இளநிலை பொது நுழைவுத் தேர்வு' எழுத வேண்டியது அவசியம்.
கல்வி நிறுவனங்கள்:
ஐ.ஐ.டி.,-மும்பை, ஐ.ஐ.டி.,-டெல்லி, ஐ.ஐ.டி.,-கவுகாத்தி, ஐ.ஐ.டி.,-ஹைதராபாத், ஐ.ஐ.டி.,-ரூர்க்கி, ஐ.ஐ.ஐ.டி.டி.எம்.,-ஜபல்பூர் உட்பட நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்கள்.
கல்வித் தகுதி:
அறிவியல், வணிகம், கலை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் 2024ம் ஆண்டில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025ல் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளும் இத்தேர்வில் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு:
அக்டோபர் 1, 2000 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி பிரிவினர், அக்டோபர் 1, 1995 அன்று அல்லது அதற்கு பிறந்தவராக இருந்தால் போதும்.
தேர்வு முறை:
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில், ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும். 'பகுதி - ஏ' மற்றும் 'பகுதி - பி' என இரண்டு பிரிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவசியம்.
தேர்வு நேரம்:
3 மணிநேரம்
விதிமுறை:
ஒரு மாணவர், இத்தேர்வை அதிகபட்சமாக இரண்டு முறை எழுதலாம்; அதுவும் தொடர்ச்சியான ஆண்டுகளில் மட்டுமே எழுத முடியும். தேர்வில் பெறும் மதிப்பெண், அத்தேர்வு எழுதிய அதே கல்வி ஆண்டில் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு செல்லுபடியாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.uceed.iitb.ac.in/2025/registration.html எனும் இணையதள பக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
ஜனவரி 19, 2025
விபரங்களுக்கு:
https://www.uceed.iitb.ac.in/2025/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...