TNPSC Group 4 Onscreen Certificate Verification 2024 :
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். முடிவுகள் வெளியானதை அடுத்து சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் வெளியாகியுள்ளது. நாளை (09.11.2024) முதல் இதற்கான பதிவேற்றம் தொடங்கப்படவுள்ளது. ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மொத்தம் 13 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Certificate Verification List 2024 :
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 15.88 லட்சம் பேர் எழுதினர். 3 முறை காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் அக்டோபர் 28-ம் தேதி முடிவுகள் வெளியானது.
ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றம் :
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானதை அடுத்து கட்டமாக ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தேர்வர்களின் மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பட்டியலில் இடம்பெற்றவர்கள் 09.11.2024 முதல் 21.11.2024 வரை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்படுவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்க் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.
தற்காலிக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பார்ப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பார்க்க வேண்டும்.
படி 1 : https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் மேலே நீள நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் மூன்றாம் இடத்தில் ‘Recruitment' என்று இருக்கும்.
படி 3 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து கீழே சில தலைப்புகள் இடம்பெற்று இருக்கும்.
படி 4 : அதில் 7-வது இடத்தில் 'Results' என்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 5 : அதில் Latest Results என்று இருப்பதை கிளிக் செய்யவும்.
படி 6 : தொடர்ந்து வேறு திரை திறக்கும். அதில் முதல் இடத்திலேயே குரூப் 4 இடம்பெற்று இருக்கும்.
படி 7 : Certificate Verification என்று இருப்பதன் கீழ் List என இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 8 : தொடர்ந்து ஒரு PDF பக்கம் திறக்கும். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இடம்பெற்று இருக்கும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை (09.11.2024) முதல் ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் (Onscreen Certificate Verification) செய்ய வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தொடங்குவது முன்பு வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை தெளிவாக தெரியுமாறு ஸ்கேன் செய்து படமாக எடுத்து வைத்துகொள்ளவும்.
படி 1 : https://apply.tnpscexams.in/ என்ற இணைப்பிற்கு செல்லவும்.
படி 2 : அதில் முகப்பு பக்கத்தில் இடது புறத்தில் நீள நிறத்தில் தலைப்புகள் இடம்பெற்று இருக்கும்.
படி 3 : அதில் மூன்றாம் இடத்தில் One Time Registration and Dashboard என இருக்கும்.
படி 4 : அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து, Registered User (Login) என்பதை கிளிக் செய்யவும்.
படி 5 : தேர்வர்களின் யூசர் பெயர் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
படி 6 : அதில் குரூப் 4 தேர்விற்கு எதிரில் சான்றிதழ் பதிவேற்றம் என்று இருக்கும்.
படி 7 : தயாராக வைத்திருக்கும் சான்றிதழ்களின் புகைப்படங்களை அந்தந்த இடத்தில் பதிவேற்றம் செய்யவும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் வழியாக மட்டும்தான் பதிவேற்றம் செய்ய முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...