_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
வருமானவரி செலுத்தும் போது குறிப்பிட்ட வருமானம் வரை U/s 87Aல் Rebate வழங்கப்பட்டு வருகிறது. 2023-24 நிதியாண்டில் கழிவுகள் போக உள்ள நிகர வருமானத்தில் Old Regimeக்கு ரூ.5,00,000 வரை ரூ.12500/-மும் New Regimeக்கு ரூ.7,00,000/- வரை ரூ.25,000/-மும் Rebateஆக வழங்கப்பட்டது.
எதற்காக இந்த 87A Rebate?
2023-24 நிதியாண்டில் கழிவுகள் போக உள்ள Net Taxable Incomeல் (நிகர வருமானத்தில்) Old Regimeல் ரூ.5,00,000 வரையும் New Regimeல் ரூ.7,00,000/- வரையும் வரி இல்லை அல்லவா. இல்லையென்றால் இல்லவே இல்லை என்று பொருளல்ல. இருக்கு ஆனா இல்ல. எப்படியெனப் பார்ப்போம்.
அதாவது, அந்தத் (5L & 7L) தொகைக்கும் வரி உண்டு. ஆனால், அவ்வாறு வரும் வரியை Net Taxable Income 5L & 7Lற்குள் உள்ளோருக்கு மட்டும் தள்ளுபடி (Rebate) செய்யும் பிரிவுதான் இந்த 87A.
87Aவை சற்று விளக்கமாகப் பார்ப்போமா?
Old regimeல் உள்ள ஒருவருக்கு Net taxable income 5 லட்சம் என்றால் அவருக்கான வருமான வரி,
முதல் 2.5L = 0
2வது 2.5L = 5% = 12,500
ஃ 5Lற்கான வரி = ரூ.12,500/-
ஆனால், 5 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு வருமானவரி இல்லை அல்லவா. எனவே, அவர் கட்ட வேண்டிய அந்த ரூ.12,500/- அவருக்குத் தள்ளுபடி (Rebate) செய்யப்படும்.
இதனடிப்படையில் தான், Old Regimeல் ரூ.5,00,000 வரை ரூ.12500/- 87Aல் Rebateஆகக் கழிக்கப்படுகிறது. 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இக்கழிவு கிடையாது.
இதைப் போன்றே New Regimeல் 7L வரை Tax இல்லை. அதாவது,
3L = 0
3L = 5% = 15000
1L = 10% = 10000
இந்த 15000 + 10000 = ரூ.25,000/- தான் ரூ.7,00,000 வரை நிகர வருமானம் உள்ளோருக்கு Rebateஆகக் கழிக்கப்படுகிறது.
மேலும், New Regimeல் ரூ.7,00,000க்கு மேல் உள்ளவர்களுக்கு Marginal Relief ஒன்றும் கூடுதலாக இந்த 87Aல் வழங்கப்படுகிறது.
New Regimeல் அதென்ன Marginal Relief?
பழைய முறையில் 5Lஐவிட ரூ.5/- கூடினால் கூட (ரூ.5,00,005/-) Rebate கழிக்க முடியாது, மொத்தத்திற்கும் வரி செலுத்தியாக வேண்டும். ஆனால், சிறு தொகை கூடுவதற்குக் கூட பெருந்தொகையை வரியாகச் செலுத்தும் நிலையைத் தவிர்க்கத்தான் Marginal Relief முறை கொண்டுவரப்பட்டது.
இதன்படி, ஒருவருக்கு 7,00,000ஐ விடக் கூடுதலாக வரும் தொகையானது, அவருக்கான மொத்த வருமானவரியைவிடக் குறைவாக இருப்பின், வருமான வரியிலிருந்து 7,00,000ஐ விடக் கூடுதலாக உள்ள தொகையை மட்டும் கழித்து வருவதை அவருக்கு Rebateஆக வழங்கப்படுகிறது.
உதாரணமாக ஒருவரது Net Taxable Income 7,10,000 எனில்,
A : 7 இலட்சத்தைவிடக் கூடுதல் தொகை
7,10,000 - 7,00,000
ஃ A = 10,000
B : 7,10,000க்கான வரி,
3,00,000 = 0
3,00,000 = 5% = 15000
1,10,000 = 10% = 11000
ஃ B = 26,000
இதில், A<B. அதாவது கூடுதல் தொகையைவிட வரி அதிகம். எனவே இவருக்கான Rebate அதாவது Marginal Relief என்பது,
B - A = 26000 - 10000 = ரூ.16,000/-
மொத்தத்தில் 2023-24 நிதியாண்டைப் பொருத்தவரை நாம் புரிந்து கொள்ள வேண்டியது,
* Old Regimeல் ரூ.5,00,000 வரை உள்ளோருக்கு வரி இல்லை என்பதால் அந்த வரித்தொகையான ரூ.12500/- Rebateஆகக் கழிக்கப்படுகிறது.
* New Regimeல் ரூ.7,00,000/- வரை உள்ளோருக்கு வரி இல்லை என்பதால் அந்த வரித்தொகையான ரூ.25,000/- Rebateஆகக் கழிக்கப்படுகிறது. மேலும், ரூ.7,00,000/-க்கு மேல் Marginal Relief கணக்கிடப்பட்டு அத்தொகை Rebateஆகக் கழிக்கப்படுகிறது.
*2024-25 நிதியாண்டிற்கான Rebate எவ்வளவு?*
Rebate பார்க்கும் முன்னர் மறுக்கா மறுக்கா அதாங்க Repeatedஆ சொல்லுங்க, "5L / 7L வரை உள்ளோருக்கு வரும் உச்சபட்ச வரிதான் அவர்களுக்கான Rebate ஆகும்."
2024-25ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரை Old Regimeல் 5L வரை வரியில்லை என்பது உட்பட வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் Old Regimeற்கான 87A Rebate அதே பழைய ரூ.12,500/- தான்.
2024-25 நிதியாண்டிற்கு New Regimeல் கடந்த ஆண்டைப்போல 7L வரை வரி இல்லை என்றாலும், வரி விதிப்பு % மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
0 - 3,00,000 = 0
3,00,001 - 7,00,000 = 5%
7,00,001 - 10,00,000 = 10%
10,00,001 - 12,00,000 = 15%
12,00,001 - 15,00,000 = 20%
above 15,00,000 = 30%
Rebate எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து முன்னர் பார்த்தோமல்லவா, அதைப் போலவே தற்போது இந்தப் புதிய % மாற்றத்திற்கும் கணக்கிடுவோம் வாருங்கள்.
New Regimeல் 7L வரை Tax இல்லை. அதாவது,
3L = 0
4L = 5% = 20000
Tax % கணக்கிடப்பட்டாலும் எதுவரை Tax இல்லை என்று அரசு கூறுகிறதோ அந்தத் தொகை வரைக்குமான வரிதான் 87Aல் Rebate ஆகக் கழிக்கப்படும் என்பதால்,
2024-25ஆம் நிதியாண்டில் New Regimeல் ரூ.7,00,000 வரை நிகர வருமானம் உள்ளோருக்கு ரூ.20,000/- தான் Rebateஆகக் கழிக்கப்படும்.
மற்றபடி இதே கணக்கீட்டிற்கு நாம் முன்னர் பார்த்த Marginal Relief உண்டு.
மேலும், இந்தக் கணக்கீடுகளோடே Standard Deduction ரூ.75,000/-ஐ சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நாம் இங்கு பார்ப்பது Standard Deduction உள்ளிட்ட கழிவுகள் போக மீதமுள்ள Net Taxable Income மீதான வரிக் கணக்கீடு மட்டுமே.
பின்குறிப்பு :
இது நான் கண்ட தெளிவு.
ஒருவேளை எனது தெளிவு சரியெனில், இரு நாள்களாகச் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வரும் Army Pay Commission Sectionன் வருமானவரி விளக்கக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நடப்பாண்டும் ரூ.25,000/- Rebate உண்டு என்பது தவறான புரிதலாகும்.
ஏனெனில், 7Lக்குள் வருவோருக்கு உட்சபட்ச வரியே ரூ.20,000/- தான் எனும் போது Rebateஆக ரூ.25,000/-ஐ எப்படி / எதற்கு கழிக்க வேண்டும்? உள்ளதிற்குத் தானே தள்ளுபடி!
Rebate ரூ.25,000/-தான் என்றால், ரூ.7,50,000/- வரை வரியில்லை என்று அரசு அறிவிக்க வேண்டியிருக்கும்.
வருமானவரித் துறை நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கீடு தொடர்பாகத் தெளிவான - முழுமையான விளக்கத்தை வெளியிட்டால் மட்டுமே எனது தெளிவும் சரியா என்பது உறுதியாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...