Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

chevening scholarship

 



இங்கிலாந்தில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் சிறந்த, சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று, 'செவனிங் உதவித்தொகை'.

முக்கியத்துவம்

இந்த சர்வதேச உதவித்தொகை திட்டம், இங்கிலாந்து அரசின் வெளிநாட்டு, காமன்வெல்த் அண்டு மேம்பாட்டு அலுவலகம் மற்றும் இதர நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது. இங்கிலாந்து கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும், ஓர் ஆண்டு முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்:


* இங்கிலாந்தில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க, தகுதியான இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* இங்கிலாந்து கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம்பெற்ற பிறகு, குறைந்தது இரண்டு ஆண்டுகளில் சொந்த நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.
* யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதேனும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில், நிர்ப்பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.
* உரிய ஆங்கில மொழி புலமை பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை சலுகைகள்:
கல்விக்கட்டணம், மாத உதவித்தொகை, இங்கிலாந்து சென்று வருவதற்கான விமானக் கட்டணம், விசா கட்டணம், தங்குமிட செலவு, செவனிங் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான போக்குவரத்து செலவு இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.

குறிப்பு:

பகுதிநேர படிப்பு, தொலைநிலைக் கல்வி, 9 மாதங்களுக்கு குறைவான கால அளவு கொண்ட படிப்புகள், 12 மாதங்களுக்கு அதிகமான கால அளவு கொண்ட படிப்புகள், பிஎச்.டி., டி.பில், ஆகிய படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

நவம்பர் 5

விபரங்களுக்கு

: www.chevening.org/scholarship/india





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive