பள்ளிப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பெண்கள், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தெரிவிக்க, போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய இணைய உலகில், தங்களது கவனம் சிதறாமல் கல்வி கற்க வேண்டும். மொபைல் போன்களை கல்வி மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால், அந்த குடும்பம் மட்டுமின்றி அந்த நாடே முன்னேறும். வருங்காலத்தில் உயர்பதவி வகித்து, பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...