பொங்கலன்று நடைபெற இருந்த சி.ஏ., தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாற்றம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.,16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14 மற்றும் 16ம் தேதிகளில், சி.ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் திருவிழா என்பது, தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு திருவிழா. இதை கருத்தில் வைத்து, தேர்வர்களுக்கு சிரமமின்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. பொங்கல் அன்று தேர்வு தேதியை மத்திய அரசு உடனே மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
சி.ஏ., தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை; ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்துகிறது. அவ்வமைப்பு தான் தேர்வுக்கான தேதியை தீர்மானித்து அறிவிக்கிறது. மற்றபடி, நிதி அமைச்சகத்துக்கும், இந்த நடைமுறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இந் நிலையில், இன்று (நவ.,26) பொங்கல் பண்டிகை அன்று ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.,16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜன., 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...