கணினிக்கு அடுத்ததாக, விண்வெளி தொடர்பான பணிகளில் அதிக வாய்ப்பு ஏற்படும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
சென்னை, ஆலந்துார், காமராஜர் மகாலில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின், 12வது ஆண்டு தேசிய விண்வெளி சங்கத்தின் சார்பில் விண்வெளி தீர்வு நோக்குநிலை- 2024 -25 என்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
நிலவில் முதன் முதலில் கால் தடம் பதித்தது அமெரிக்காவாக இருந்தாலும், முதன் முறையாக தென்துருவத்தில் நமது விண்கலம் தான் தரையிறங்கியது.நமது சந்திராயன் வாயிலாக, நிலவில் நீர் இருப்பது கண்டறிந்த பின், மற்ற நாடுகள் இதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றன.
நிலவு தொடர்பாக ஆய்வில் மற்ற நாடுகள் பல முறை முயற்சிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா ஒரே முறையிலேயே சாதித்துள்ளது. நிலவில் உள்ள கணிமப்பொருள், நமது அடுத்த தலைமுறைக்கான மாற்று எரிபொருளாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
சந்திரயான் வெற்றி சாதனைக்கு பிறகு, நமது மாணவர்களிடமும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கல்லுாரி முடித்த மாணவர்கள் விண்வெளி தொடர்பான, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை துவக்கி வருகின்றனர். இனி விண்வெளியில் ஏராளமான பணி வாய்ப்புகள் வரும்.
நம் நாட்டில் இஸ்ரோ மட்டும் இல்லாமல், தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆய்வில் ஈடுபடுகின்றன. எனவே, கணனிக்கு அடுத்து விண்வெளி தொடர்பான பணிகளில் அதிக வாய்ப்பு உறுவாகும்.
அரசு பள்ளி மாணவர்களுக்காக தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை, திருச்சியில் சில மாதிரி பள்ளிகள் உருவாக்கியுள்ளோம். விண்வெளியில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அது தொடர்பாக போதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...