பொள்ளாச்சி, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், விதைப்பந்து தயாரிக்கும் பணிக்கு தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா, விதைப்பந்து தயாரிக்க பயிற்சியளித்தார்.
இதை தொடர்ந்து, மாணவர்கள், பள்ளி வளாகங்கள், வீடுகள், பொது இடங்களில் கிடைக்கும் வேம்பு, சீதா, புங்கை, மா உள்ளிட்ட விதைகளை சேகரித்தனர்.
இவற்றை கொண்டு, விடுமுறை நாட்களில் ஆசிரியர் கீதா, 1,000 விதைப்பந்துகளையும், மாணவர்கள், 10 பேர், வீடுகளில் இணைந்து, 1,000 விதைப்பந்துகளையும் தயாரித்தனர். அவற்றை, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரிடம் ஒப்படைத்தனர்.
பொது அமைப்புக்கு விதைப்பந்துகள் தானமாக வழங்கியதற்காக மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வள மையம் சார்பில், மாணவர்களுக்கு, பசுமை பாதுகாவலர் விருதும்; தலைமையாசிரியர், ஆசிரியருக்கு, இயற்கை நேசர் விருதும் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...