பள்ளிக்கல்வித்துறையின்
கீழ் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை 2024-25-ம் ஆண்டில்
ஆய்வு செய்ய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.
அந்த வகையில் முதன்மைக்கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய இயக்குனர்கள், இணை இயக்குனர்களை ஆய்வு அதிகாரிகளாக நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், சென்னைக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் எம்.பழனிசாமி, கள்ளக்குறிச்சிக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் எஸ்.நாகராஜ முருகன், திருவள்ளூர் மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட 33 கல்வி மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் இந்த ஆய்வு பணிகளை டிசம்பர், ஜனவரி மாதங்களில் முடித்து ஆய்வு அறிக்கையினை ஆய்வு முடித்த 15 நாட்களுக்குள் 2 நகல்களாக எடுத்து இயக்குனரின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...