பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்காக என்ன செய்யும்?
கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஸ்ரீ. பால்வார்பட்டி கிராமத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் ஒன்பதாவது படிக்கும் மகள்.
சிறுவயதிலேயே பாடும் திறமை இருப்பதை அம்மாணவியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை கண்டறிந்து இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து தன்னுடைய ஆதரவில் ஊக்கப்படுத்தி தனியார் தொலைக்காட்சி 'சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்ல்' மேடை ஏற்றி இருக்கிறார். பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை திகைக்க வைத்திருக்கிறார்.
அவ்வளவு பெரிய மேடையை எத்துணை இலகுவாக முதிர்ச்சியாக கையாண்டார் யோக ஸ்ரீ.
அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை ஆண்டுதோறும் நடத்தும் கலைப் போட்டிகளில் கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்று அங்கு வந்திருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆச்சரியப்படைத்தி இருக்கிறார் யோக ஸ்ரீ.
பள்ளிக் கல்விதுறை மூன்றாண்டுகளாக விதைத்த விதைகள் சிறப்பான பலனை தரத் தொடங்கியிருக்கின்றன.
மணவாடி அரசுப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்.
மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவைகள் அரசுப்பள்ளிகள் என்று தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...