சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், தேர்வுக்குழு சார்பில் 2024-2025ம் ஆண்டு பாரா மெடிக்கல் டிகிரி படிப்புகளில் சேர தேர்வுக்குழு முதல் கட்டமாக அரசு கல்லுாரிகளுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்தி தேர்வானவர்கள் அக்டோபர் 4ம் தேதி கல்லுாரியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு அரசு மறறும் சுயநிதி, தனியார் கல்லுாரிகளில் சேர அக்டோபர் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தி தேர்வானவர்கள் அக்டோபர் 24ம் தேதி கல்லுாரிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மூன்றாம் கட்டமாக இறுதிக் கட்ட ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க நேற்று 16ம் தேதி முதல் நாளை 18 ம் தேதி வரை பதிவு செய்து, வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் கவுன்சிலிங்கில் கல்லுாரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் தேர்வு முடிவு வரும் 21ம் தேதி அன்று வெளியாகும். அன்றே ஆன்லைனில் முடிவை பதிவிறக்கம் செய்து வரும் 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர்ந்து கொள்ள இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இணையதள வழியாக பங்குபெற விரும்புவோர் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் உள் நுழைவு செய்து விரும்பிய அரசு மற்றும் சுய நிதி கல்லுாரிகளில் விரும்பிய பாட பிரிவுகளை தேர்வு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...