தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது DEO ஒப்புதல் பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டிகள், NCC, NSS என எதுவாக இருந்தாலும் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது மாவட்ட கல்வி அலுவலரின் முன் அனுமதி இல்லாமல் அழைத்துச் செல்லக்கூடாது. அதன் பிறகு பள்ளியை விட்டு மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது பெற்றோரிடம் தனித்தனியாக எழுதி கையெழுத்து வாங்க வேண்டும்.
அதன் பிறகு மாணவ மாணவிகள் பாலியல் புகார்கள் குறித்து 14417, 1098 என்ற நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்காக அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் எதிரொலியாக தற்போது மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும் முன்பு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பெற்றோர்களிடம் எழுத்து பூர்வமாக ஒப்புதல் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...