பொள்ளாச்சி:
பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து, அவரவர் குடியிருப்பு பகுதிகளில், டெங்கு கொசு உற்பத்தியாவதைக்கண்டறிந்துதகவல் தெரிவிக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகரில், கடந்த சில நாட்களாக, பலரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, காய்ச்சல் பரவுவதை தடுக்க, ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், மருத்துவ முகாம் அமைத்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.
இதுதவிர, அனைத்து வகையான காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக்கருவி, ரத்தம், சுய தற்காப்பு சாதனங்கள் போதிய அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு இன்மை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால், கொசுக்கள் உற்பத்தியாகி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது.
எனவே, பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாவதைக்கண்டறிந்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு முறைசாரா மதிப்பீடு அளவில், மதிப்பெண் அளித்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, கொசு உற்பத்தியாவதையும் கண்டறிந்து தடுக்க முடியும்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், தாங்கள் வசிக்கும் டெங்கு கொசு புழுக்களைக் கண்டறிந்தால் அதனை குடுவையில் சேகரித்து, பள்ளிக்கு எடுத்துச்செல்ல ஊக்குவிக்க வேண்டும்.
பின், தலைமையாசிரியர், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச்சென்று, கொசுப் புழு உற்பத்தியான இடம், மாணவ, மாணவியரின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு, அப்பகுதியில் மாஸ் கிளீனிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுப் புழு உற்பத்தியைக்கண்டறியும் மாணவ, மாணவியருக்கு, முறைசாரா மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...