பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க, மாணவர் மனசு என்ற புகார் பெட்டி வைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி அறிக்கை:
பள்ளிகளில் மாணவ - மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை, 14417, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இந்த எண்கள், பாடப்புத்தகங்களின் பின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்புக்காக, எஸ்.எஸ்.ஏ.சி., என்ற மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ளவர்களுக்கு, போக்சோ சட்டம் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக, விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில், மாணவர் மனசு என்ற புகார் பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று, ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...