பல்கலைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறாமல், பல்கலையை விட்டு வெளியேறுவதாகவும் அரசின் கவனத்துக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, உயர் கல்வி துறை சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் பணிக்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல்கலைகள் சுமுகமாக செயல்படும் வகையில், அனைத்து பல்கலைகளிலும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக, பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதில், பல்கலைக்குள் நுழையும் போதும், பணி முடிந்து வெளியேறும் போதும் பதிவுசெய்வது கட்டாயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...