Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அக்கவுண்டில் பணம் டெபிட் செய்யப்பட்டு ATM மிஷினில் பணம் வரவில்லையா? இதை மட்டும் செய்யுங்க!

நம்மில் பலர் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் பணத்திற்கான தேவை இருந்துதான் வருகிறது.

அப்படி பணம் தேவைப்படும் நேரங்களில் ஏடிஎம் மையங்களுக்குச் செல்லும் சிலருக்கு பணம் டெபிட் செய்யப்பட்ட மெசேஜ் வந்திருக்கும். ஆனால் பணம் கைக்கு வந்திருக்காது. இது போன்ற சூழலில் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பரிவர்த்தனையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்: ஏடிஎம் மையத்தில் பணம் டெபிட் செய்யப்பட்ட மெசேஜ் வந்திருக்கும், ஆனால் பணம் வராமல் இருக்கும். இது போன்ற சூழலில் பரிவர்த்தனை வெற்றிகரமாக இல்லை என்பதை குறிக்கும் ரசீது கிடைத்துள்ளதா? என்பதைச் சரி பாருங்கள். ஒரு வேலை அப்படி கிடைத்தால் அதை பத்திரமாக வைத்திருங்கள்.

இதை வைத்து வங்கியில் புகார் அளிக்கலாம். ரசீது எதுவும் வழங்கப்படாமல் பணம் அக்கவுண்டில் இருந்து எடுக்கப்பட்டிருந்தால் பரிவர்த்தனை நேரம், தேதி மற்றும் ஏடிஎம் மையத்தின் இடம் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த விவரங்கள் பின்னர் உங்கள் வங்கிகளால் கேட்கப்படும். SMS அறிவிப்பைச் சரி பார்க்கவும்: இன்றெல்லாம் பல வங்கிகளும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் பட்சத்தில் SMS அறிவிப்புகளை அனுப்புகின்றன.

உங்கள் கணக்கில் பணம் டெபிட் செய்யப்பட்டிருந்தால், உங்கள் இன்பாக்ஸில் SMS வந்திருக்கிறதா? என்பதைச் சரி பாருங்கள். இந்த மெசேஜில் ஏடிஎம் இடம், தொகை போன்ற விவரங்கள் இருக்கும், இது உங்களுக்கு ஒரு சான்றாக செயல்படும். உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்: பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டு, பணம் அக்கவுண்டில் இருந்து கழிக்கப்பட்டிருந்தால் கூடிய விரைவில் உங்கள் வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.

பெரும்பாலான வங்கிகள் ஏடிஎம் கார்டின் பின்புறத்தில் கஸ்டமர் கேர் நம்பரை வழங்குகின்றன. இந்த நம்பருக்கு கால் செய்து கார்டு விவரங்கள், அக்கவுண்ட் நம்பர் பரிவர்த்தனை தகவல் ஆகியவற்றை வழங்கவும். அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் உங்களுக்கு விளக்குவார்கள். உங்களுடைய அழைப்பின் போது வாடிக்கையாளர் சேவை வழங்குனரிடம் நடந்த விஷயத்தை கூறுங்கள்.

குறிப்பாக ஏடிஎம் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இருந்து உண்மையிலேயே, பணம் வழங்கப்படாமல் அக்கவுண்டில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டிருந்தால், வங்கிகள் விசாரணையைத் தொடங்கும். உண்மை கண்டறியப்பட்டால், உங்கள் கணக்கில் மீண்டும் தொகை வரவு வைக்கப்படும். ஆனால் இது போன்ற சிக்கல்களை தீர்க்க பொதுவாக 7 நாட்கள் வரை நேரம் எடுக்கலாம். ஒரு வேலை அதிக அளவில் டெபிட் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு வங்கிகள் நிலைமையை பொறுத்து உடனடி தீர்வுகளையும் வழங்கும்.

உங்கள் வங்கிக் கிளையை பார்வையிடவும்: வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் வங்கி கிளையை நேரடியாக பார்வையிடலாம். தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் கொண்டு செல்லுங்கள். வங்கி ஊழியர்கள் சிக்கலை சரி செய்ய உதவுவார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கும் தெரிவிப்பார்கள். கிளை மேலாளரிடம் சிக்கலை விரிவு படுத்துங்கள்: வாடிக்கையாளர் சேவையிடம் பேசிய பிறகும் அல்லது வங்கி கிளைக்கு சென்ற பிறகும் உங்களுடைய வழக்கு தீர்க்கப்படாத பட்சத்தில் நீங்கள் கிளை மேலாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

தேசிய நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளியுங்கள்: தேசிய நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையத்தில் (NCDRC) ஒரு புகாரை பதிவு செய்யவும். NCDRC என்பது நுகர்வோர் தொடர்பான குறைகளைக் கையாளும் ஒரு அரசாங்க அமைப்பாகும். மேலும் அவை ஏடிஎம் பிழைகள் மற்றும் நியாயமற்ற கட்டணங்கள் போன்ற நிதிச் சிக்கல்களைத் தீர்க்க உதவும். உங்கள் பணத்தைக் கோருவதற்கு மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பினால், NCDRC ஒரு நம்பகமான விருப்பமாகும். ஏடிஎம் மையங்களில் பணம் அனுப்பப்படாமல் அக்கவுண்டில் இருந்து டெபிட் செய்யப்பட்டிருந்தால் பதற்றம் அடைய வேண்டாம். மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களை பின்பற்றி நடவடிக்கை எடுக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive