மக்களாட்சித்
தத்துவத்தின் உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில்
முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம் , அண்ணல் அம்பேத்கர் அவர்கள்
வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும் . இந்திய அரசியலமைப்பு
சட்டத்தின் 75 - வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும்
26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத்
துறைகளிலும் , மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்
உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் , அனைத்து சார்நிலை அரசு
அலுவலகங்கள் , மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் தன்னாட்சி அதிகார
அமைப்புகள் , நிறுவனங்கள் , தன்னாட்சி அரசு நிறுவனங்கள் , அனைத்துப்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
முகப்புரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு
, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் , பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Press Release 2330 - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...