|
பிடல் காஸ்ட்ரோ |
திருக்குறள்:
"பால் :பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண் :820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
பொருள்:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து ,பலர் கூடிய மன்றத்தில் பழித்துப்
பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்."
பழமொழி :
The fearless goes into the assembly.
அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
முயற்சி என்பது விதை போல.... அதை விதைத்துக் கொண்டே இரு... முளைத்தால் மரம் இல்லையேல் அது மண்ணிற்கு உரம். - கோ.நம்மாழ்வார்.
பொது அறிவு :
1. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
விடை : ரிபோபிளேவின்.
2. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
விடை: ஜான் டால்டன்
English words & meanings :
Foolishமுட்டாள்தனமான
Gladமகிழ்ச்சி
வேளாண்மையும் வாழ்வும் :
தீமைபயக்கும் பூச்சிகளை அழிக்க உபயோகப் படுத்த படும் கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன.
நவம்பர் 25
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நீதிக்கதை
முதல் நிலை.
பேராசிரியர் ஒருவர் மூன்று கேள்விகளை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் எழுதுமாறு மாணவர்களிடம் கூறினார்.
அதில் மிகக் கடினமான கேள்விக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விக்கு 80 மதிப்பெண்களும், எளிதான கேள்விக்கு 60 மதிப்பெண்களும் தருவதாக கூறினார்.
மாணவர்களை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் அளிக்கக் கூறினார். தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள விடைகளை பார்க்காமல் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தடுத்த கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை தந்தார்.
மாணவர்களோ, "பதில்களையே பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே! கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்கள் சரியாக பதில் எழுதி உள்ளார்களா? என நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா?"என்று கேட்டனர்.
அதற்கு அவர் "உங்கள் பதிலுக்காக நான் இந்த தேர்வை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறினார்.
மேலும்,"கடினமாக உழைப்பவர்களே எப்பொழுதும் முதல் நிலையை அடைவார்கள் என்பதை நீங்கள் அறியவே நான் இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறி முடித்தார்.
நீதி: விடாமுயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் எந்த கடினமான செயல்களையும் எளிதாக செய்ய இயலும்.
இன்றைய செய்திகள்
25.11.2024
* நவம்பர் 26ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: தமிழக முதல்வர் உத்தரவு.
* குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தகவல்.
* அசாமில் லேசான நிலநடுக்கம்: 3.8 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை.
* ஐ.எஸ்.எல். கால்பந்து; இன்றைய லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மோகன் பகான் அணி.
* ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனை படைத்தார் விராட் கோலி.
Today's Headlines
* The preamble to the Constitution must be read in government offices, schools and colleges on November 26: Tamil Nadu Chief Minister's order.
* Minister Durai Murugan informed that funds will be allocated in the upcoming budget to make the Mordhana Dam near to Gudiyatham a tourist destination.
* Mild earthquake in Assam: The National Geological Survey has reported that it has been recorded at a magnitude of 3.8Richter .
* Russian President Putin warns that countries that supply missiles to Ukraine will also be attacked.
* ISL Football; Mohun Bagan team won a huge victory by defeating Jamshedpur in today's league match.
* Virat Kohli set a world record for the foreign player who scored the most centuries on Australian soil.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...