கிராம சபைக் கூட்டம் - 23.11.2024 அன்று நடைபெற உள்ளது!!
நவ. 23-ல் கிராம சபை!
நவ.1-ம் தேதி, ஊராட்சி தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம், நிர்வாக காரணங்களால் நவ.23-ம் தேதி ஒத்திவைப்பு !
ஊராட்சி க்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவ.23-ம் தேதி நடத்த உத்தரவு !
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...