அடுத்த ஆண்டான 2025ல் பொது விடுமுறை தினமாக, 23 நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், மூன்று நாட்கள் ஞாயிற்றுக்கிழமை.
அரசு பொது விடுமுறை நாட்களில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்படும். இது தவிர, அனைத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. இது, மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தும்.
அடுத்த ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்களில், மூன்று நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும், இரண்டு நாட்கள் சனிக்கிழமையும் வருகின்றன.
மேலும், நடப்பு 2024ம் ஆண்டை விட, 2025ல் விடுமுறை நாட்களில் ஒரு நாள் குறைவு. ஏனெனில், காந்தி பிறந்த நாளில் விஜயதசமி வருவதால், விடுமுறை எண்ணிக்கையில் ஒன்று குறைந்துஉள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகை, 2025ல் ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. ஏற்கனவே 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை.
போகி பண்டிகை 13ம் தேதி வருகிறது. அன்றும் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றாலும், அன்று ஒரு நாள் விடுமுறை எடுத்தால், ஜன., 11 முதல் 16ம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்களாகும்.
ஜன., 17ம் தேதி ஒருநாள் அரசு விடுமுறை அறிவித்தால், ஒன்பது நாட்கள் லீவுக்கு வாய்ப்புள்ளது.
அத்துடன், மார்ச் 31 திங்கள் ரம்ஜான்; ஏப்ரல் 14 திங்கள் தமிழ் புத்தாண்டு; ஏப்ரல் 18 புனித வெள்ளி; ஆகஸ்ட் 15 வெள்ளி சுதந்திர தினம்; செப்., 5 வெள்ளி மிலாது நபி; அக்., 20 திங்கள் தீபாவளி வருவதால், சனி, ஞாயிறு சேர்த்து, அப்பண்டிகைகளின் போது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...