அடுத்த ஆண்டு திருவள்ளுவர் தின விழாவை ஜனவரி 15ல் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு, ஹலசூரு ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி, திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில், திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
இவ்விழா கொண்டாட்டம் குறித்து, விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவரும், அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளருமான பையப்பனஹள்ளி ரமேஷ், நேற்று திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பல்வேறு தமிழ் சங்கங்கள், அமைப்புகள், கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
உலக தமிழர்களின் ஒப்பற்ற அடையாளமாக, கர்நாடக மாநில தமிழர்களின் முகவரியாகவும், பாதுகாப்பு கேடயமாகவும் திகழும் திருவள்ளுவர் தின விழாவை இம்முறை விமரிசையாக கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
விழாவில் முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வது; அனைத்து தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், சர்வ கட்சி தலைவர்களை அழைப்பது; தமிழரின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்துவது; திருக்குறள் ஓதுவது உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
விழாவில் அனைவரும் ஜாதி, மத பாகுபாடின்றி கலந்து கொள்ள வேண்டும் என்று, பையப்பனஹள்ளி ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...