கார்ல் லின்னேயஸ் |
Faith is the force of life
நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.
இரண்டொழுக்க பண்புகள் :
*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.
* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.
பொன்மொழி :
எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உண்டு. ஒன்று காலம், இன்னொன்று மௌனம். - அப்துல் கலாம்.
பொது அறிவு :
1. தாவர வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கபடுபவர்
விடை: கார்ல் லின்னேயஸ்.
2. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர்
விடை: ஆண்டன் வீன் லியூவன் ஹூக்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
பயிர் எச்சங்கள் மீண்டும் மண்ணுக்குள் உழப்படுவதின் மூலமும் தழைச் சத்து பயிருக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யலாம்[3] கரிம விவசாயிகள் மக்கிய கால்நடை எருக்களையும், பலவகைப்பட்ட புண்ணாக்கு, பதனப்படுத்தப்பட்ட சில விதைகளின் தூள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
நீதிக்கதை
நம்பிக்கை
குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது.எந்த செயலை செய்தாலும் முதல் முயற்சியிலேயே முழுமையான வெற்றி அவனுக்கு கிடைப்பதில்லை.
இதை குரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் சிஷ்யனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி இந்த சிக்கலில் இருந்து விடுபடுவது என்ற கவலையோடு தான் எந்த பணியையும் தொடங்குவார். எப்போதும் சிறு பதற்றத்துடனே இருப்பார். பதறிய காரியம் சிதறும் தானே! அதே போல் அவருடைய எந்த செயலுக்கும் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைப்பது இல்லை.
ஒரு சில நாட்கள் அவனை கவனித்த குரு அவரை அழைத்து பேசினார். குரு சிஷ்யனிடம் "கிளி ஜோசியக்காரர்களிடம் இருக்கும் கிளியானது அட்டையை எடுக்க வெளியில் வரும் பொழுது மனிதனைப் போலவே நடந்து வந்து எடுத்துக் கொடுத்துவிட்டு. பின்பு நடந்தே கூண்டுக்குள் செல்லும். இது எதனால் என்று தெரியுமா?" என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்து விட்டு சிசியன் சித்தி நேரம் யோசித்து விட்டு, "தெரியவில்லை குருவே" என்றார்.அப்போது குரு "சுதந்திரமாக பறந்து திரியும் கிளியை பிடித்த உடன் முதலில் அதனுடைய சிறகுகளை வெட்டி விடுவார்கள். தன்னால் பறக்க இயலும் என்பதை உணர்ந்து பறக்க முயற்சி செய்யும். சிறகுகள் இல்லாததால் அதனால் பறக்க இயலாது. ஆனால் தன்னுடைய முயற்சியை விடாமல் செய்து கொண்டே இருக்கும். சிறிது காலம் கழித்து தன்னால் இனிமேல் பறக்க இயலாது என்ற முடிவுக்கு வந்துவிடும். சிறகுகள் மீண்டும் வளர ஆரம்பித்தாலும் தங்களால் பறக்க இயலாது என்ற எண்ணம் இருப்பதால் பறக்காது" என்று கூறினார்.
குரு கூற கூற கிளிக்கும் தனக்கும் என்ன ஒற்றுமை என்று அரைகுறையாக சிஷ்யனுக்கு புரிய ஆரம்பித்தது. மேலும் குரு,
"எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல.எத்தனை முறை தோல்வியை சந்திக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்கு பின்பும் அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என்று நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியை மேற்கொள்வதும் தான் முக்கியமாகும்." என்றார் குரு.
அதன்பின்னர் சிஷ்யனுக்கு தோல்விகளை பொருட்படுத்தும் பழக்கம் குறைந்துவிட்டது. என்ன ஆச்சரியம்! முதல் முயற்சியிலேயே வெற்றியும் அவருக்கு கிடைத்தது.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...