Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூக மாற்றத்தை விதைக்கும் 10 கட்டளைகள்

 பிரதமர் நரேந்திர மோடியின் கனவுப்படி, இந்தியா 2045 ல் வளர்ந்த நாடாக வேண்டுமெனில், சமூக, தனிமனித, பொருளாதார தன்னிறைவு பெற வேண்டும். இதை, 10 சி கட்டளைகள் வாயிலாக மாணவர்கள் மனதில் விதைத்து, எழுச்சிமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை என தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.

தினமலர் நாளிதழ் சார்பில், லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா - 2024 கோவை தினமலர் அலுவலக லோட்டஸ் ஹாலில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரியில் இருந்து, 10 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில், தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு முதுநிலை உதவி ஆசிரியர் விஜில்குமார் தலைமையேற்றார். கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.

விருது வழங்கிய, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், யு.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி பேசியதாவது:

ஒரு நாட்டின் சமூக வளர்ச்சி, தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கல்வி. அக்கல்விக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. அப்படிப்பட்ட ஆசிரியர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து, விருது வழங்கும், தினமலர் நாளிதழின் செயல்பாடு போற்றுதலுக்குரியது.

நம் நாடு சுதந்திரம் பெற்று, 77 ஆண்டுகளாகிவிட்டது. நமக்கு பின், குடியரசு அந்தஸ்து பெற்ற சிறு சிறு நாடுகள், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறிவிட்டன. இந்தியாவும், வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில், எழுச்சிமிக்க இளைஞர் சமுதாயம் உருவாக வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா, ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஆனால், நம் தனிமனித வருமானம், இன்னும் உயரவில்லை. இதை அதிகரிக்க வேண்டுமெனில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி விகிதத்தை அதிகரித்து, திறன்மிகு இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

10 கட்டளைகள்

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியா 2020ல் வல்லரசாகும் என்ற கனவை விதைத்தார். பிரதமர் மோடி, 2045ல் இந்தியா முன்னேறிய நாடாக வேண்டுமென கூறுகிறார். இப்படிப்பட்ட வளர்ச்சி, வகுப்பறையில் இருந்து துவங்கினால் தான், இந்தியா வலிமைபெற்ற நாடாக எதிர்காலத்தில் மாறும். இதற்கு, 10 சி கட்டளைகளை வகுப்பறையில் செயல்படுத்த வேண்டும்.

கேள்வி கேட்கும் ஆர்வம் (Curiosity to Question): அறிவியல், கணித ஆய்வுத்திறனுக்கு, கேள்விகளே அடிப்படையாக இருந்துள்ளன. மாணவர்களை, பயமின்றி கேள்வி கேட்க அனுமதியுங்கள். அப்போது தான், அதற்கான பதில் தேடும் ஆர்வம் ஏற்படும்.

புதுமையான படைப்பாக்க திறன் (Creativity to Innovate): நம்மை சுற்றியுள்ள ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். புதுமையான படைப்பாக்க திறனால் மட்டுமே, நம்முடைய இயற்கை வளம், பொருளாதாரம், நேரம் ஆகியவற்றை மிச்சப்படுத்த முடியும்.

ஆழ்ந்த சிந்தனை (Critical Thinking for Problem Solving): மேலோட்டமான சிந்தனையால், எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்த முயற்சியுங்கள். அப்போது தான், ஒரு பிரச்னைக்கு, தீர்வுகாண பல வழிகள் இருப்பதை கண்டறிய முடியும்

திறமை வளர்த்தெடுத்தல் (Competence to Earn a Living): பள்ளிக்கல்வி முடிக்கும் ஒரு மாணவருக்கு, தன்னுடைய தனித்திறன் என்ன, உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்ய வேண்டுமென்ற அறிவு இருக்க வேண்டும். தனித்திறன் இல்லாமல் பெறும் மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை என்பதை புரிய வையுங்கள்.

தொடர்புத்திறன் (Communication for Presenting Ideas): பிறருடன் எளிதில் பேசுவது, கலந்துரையாடுவது, தன் கருத்தை எந்த தயக்கமும் இன்றி முன்வைப்பது போன்ற வாய்ப்புகளை, வகுப்பறையில் ஏற்படுத்தி தர வேண்டும். இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான திறனாக, இது அமைந்துள்ளது.

ஒன்றிணைந்து செயல்படுவது (Collaboration for Effective Teamwork): பள்ளிகளில் தான், இத்திறனை வளர்த்தெடுக்க முடியும். குழு செயல்பாடு இருந்தால் தான், பிறரின் கருத்துகளை கேட்பது, தெரியாததை தெரிந்து கொள்வது, இலக்கை எட்டுவது போன்றவை சாத்தியப்படும்.

நல்ல குணநலன்கள் (Character to Live a Meaningful Life): எவ்வளவு திறன்மிக்க மாணவராக இருந்தாலும், ஒழுக்கம், கீழ்படிதல், நேரம் தவறாமை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற, நல்ல குணநலன்கள் இருந்தால் தான், அவர்கள் நல்ல குடிமகன்களாக சமுதாயத்தில் உயருவர்.

தைரியமாக எதிர்கொள்வது (Courage to Face Challenges): எந்த சூழலையும், தைரியமாக எதிர்கொள்ளும் திறன் இருப்பது அவசியம். சில இடங்களில், 'இதை என்னால் செய்ய முடியாது என்பதை கூறுவதற்கான, தைரியம் இருந்தால் தான், அவர்களால் தனித்துவம் மிக்கவர்களாக திகழ முடியும்.

பிறருக்கு உதவுதல் (Compassion for Helping Others): நம் சமூக கட்டமைப்பு, பிறரை சார்ந்து வாழ்தல் என்பதாகவே உள்ளது. இங்கே தனிநபர் நலன் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு சமூக நலனிலும், மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பான்மையால் மட்டுமே, இதை சாத்தியப்படுத்த முடியும்.

நாட்டுப்பற்று வளர்த்தல் (Commitment to Nation Building): ஒரு நாட்டின் குடிமகன், அந்நாட்டின் ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு பங்காற்றுதல் அவசியம். சுயநலமில்லாமல், நாட்டின் நலனை முதன்மையாக கொள்ள வேண்டும். இதை வகுப்பறையில் விதைப்பது அவசியம்.

இவ்வாறு, அவர் பேசினார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive