சென்னை ஐஐடி-ல் சைபர் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.
இணைய பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையத்தை (சைஸ்டார்) செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம் பாதுகாப்பு, ஐஓடி பாதுகாப்பு ஆகியவற்றில் அதிநவினத் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சியை இந்த மையம் மேற்கொள்ளும்.
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, மைய ஒருங்கிணைப்பாளர்களான ஸ்வேதா அகர்வால், செஸ்டர் ரெபைரோ, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் ஜான் அகஸ்டின், கல்வியாளர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் இம்மையத்தை தொடங்கி வைத்தனர்.
சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் காமகோடி பேசுகையில், தேசத்தின் பாதுகாப்பிற்காக இணையப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான செயலில் இறங்குவது மிகவும் முக்கியம். இந்த சூழலில் இத்தகைய முயற்சிகள் அவசியம், என்றார்.
மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஸ்வேதா அகர்வால் கூறுகையில், அடிப்படை ஆராய்ச்சி முதல் அன்றாடப் பயன்பாடுகள் வரை ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிப்பது வரையிலான பங்களிப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறோம், என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிமோன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி இயக்குனரும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியருமான ஷபி கோல்ட்வாசர், ஐஐடி காரக்பூர் பேராசிரியர் தேப்தீப் முகோபாத்யாய், பேடர்போர்ன் பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர் கிறிஸ்டியன் ஷீடலர், விஞ்ஞானி டேமியலன் ஸ்டீல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...