நாள்: 05.10.2024.
தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.
தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்திய முதல் பருவ தேர்வு முறையும் மதிப்பெண்களை பதிவு செய்யும் நடைமுறையும் ஏற்றுக்ஸகொள்ளவே முடியாத செயல்பாடாக உள்ளது.
தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறிவு மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலியில் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறை கடிதம் ந.க.எண் 018919/ஜெ2/2024 நாள் 03.10.2024 அன்று வெளியிட்டுள்ளார்கள்.
தொகுத்தறி மதிப்பெண்கள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை 10 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 6 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும், 4 ,5 வகுப்புகளுக்கு 12 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும் அதுவும் 09.10.2024 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளே 07.10.2024 ஆகும்.
எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இருத்தல் கூடாது. தொடக்கக்கல்வித்துறையில் ஒன்றியம் வாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? எத்தனை?. ஓராசிரியர் பள்ளிகள் எத்தனை? மூன்று ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? ஐந்து ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? வகுப்பிற்கு 30 மாணவர்கள் 40 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் எத்தனை? இதெல்லாம் புள்ளி விவரத்தினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தொடக்கக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் முறையினை ஏதும் அறியாத தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு நடைமுறைப் படுத்த வேண்டுமா? அப்படி நடைமுறைப் படுத்துவது ஏற்புடையதாக ஒரு போதும் அமையாது.
எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளரை நியமனம் செய்தும் ஆசிரியர்களை இப்பணியினை மேற்கொள்ள சொல்வது ஏற்புடையதாகுமா..?
மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளிகளில் பார்வையிட்டு வெளியிட்டு வருகிற கருத்தொற்றுமை நமக்கு ஒருபோதும் அமைய வேண்டாம்.
தொடக்க கல்வி இயக்குனர் அவர்களும், இணை இயக்குனர் அவர்களும் ஒரு கடிதத்தினை அனுப்புவதற்கு முன்னர் நாம் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுகிறோம் என்பதனை நினைவில் கொண்டு செயல்படுத்த பெரிதும் கேட்டுக் கொள்கிறோம்.
பள்ளி தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இம்மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?
மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். வாய்ப்பு இல்லை எனில் எக்ஸ் தளத்திலும், மீடியாக்கள் மத்தியிலும், பொது வெளியிலும் இந்த நிலைமையினை வெளியிடுவதை தவிர வேறு வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. யதார்த்த நடைமுறையினை பகிர்ந்து கொள்கிறோம்.
வரவேற்க வேண்டியதை வரவேற்று சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் பார்வைக்கு கொண்டு வருகின்ற நிலைப்பாட்டை உடைய இயக்கத்தின் மூத்த தலைவர்,
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...