மதுரையில் பள்ளிகளுக்கு தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. முத்துப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் நபரை கண்டறிவது போலீசாருக்கு சவாலாகவும், தலைவலியாகவும் உள்ளது.
மதுரையில் செப்.30ல் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 4 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அக்.2ல் சின்னசொக்கிக்குளம், காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரிங் ரோட்டில் உள்ள ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அக்.6 ல் மதுரை மாவட்டம் பேச்சிகுளம் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. 4வது முறையாக அக்.8ல் கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அக்.10ல் புதுார் அல்அமின் நகர் தனியார் நடுநிலைப்பள்ளி, வீரபாஞ்சானில் உள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல்விடுக்கப்பட்டது.
6வது முறையாக முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் வழக்கம் போல் சோதனை செய்து வழக்கம் போல் புரளி என தெரிவித்தனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மற்றவர் இமெயிலை ஹேக் செய்து வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் யார் என இதுவரை மர்மமாக உள்ளது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும், இப்படி மெயில் அனுப்பி அலைக்கழிக்கும் குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் திணறுகின்றனர். வெடிகுண்டு புரளி போலீசாருக்கு சவாலாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...