திருவண்ணாமலையில், அனைத்து துறை அலுவவர்களுடன், அரசு திட்டப்பணிகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம், நேற்று துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம் துவங்கியதுமே, ஆரணி, வந்தவாசி பகுதியில்தான், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கான காரணம் என்ன? என, துணை முதல்வர் கேள்வி எழுப்பினார்.
பதில் அளித்த அதிகாரிகள், சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரமற்ற முறையில் கல்வி கற்பிக்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு சென்ற பின்பும், ஆசிரியர்கள் சரிவர கல்வி கற்பிப்பதில்லை. இதனால் தான், மாணவர்கள் கல்வித் தரம் பாதித்துள்ளது இப்படிப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும் பணி நடக்கிறது' என்றனர்.
அடுத்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தமிழ் பாடத்தில் மட்டும் எத்தனை பேர், கடந்த ஆண்டு தோல்வியுற்றுள்ளனர் என, துணை முதல்வர் கேள்வி எழுப்பியதும், கல்வித்துறை அதிகாரிகளிடம், எந்த புள்ளி விபரமும் இல்லை. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குறுக்கிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரை மணி நேரத்தில் புள்ளி விபரங்கள் தருகிறோம் எனக்கூறி, துணை முதல்வரிடம் சமாளித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...