Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு... ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் வேலை!

 இந்திய ராணுவப் பப்ளிக் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 1983-ல் தொடங்கப்பட்ட ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பு ஆகும். தற்போது, நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.


இந்த ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.. இது குறித்த விவரங்கள்:


பணியின் பெயர்கள்:


Post Graduate Teachers(PGT)


Trained Graduate Teachers (TGT)


Primary Teachers (PRT)

vikatan%2F2024-10-19%2Ff1oh1yu7%2F33b930cf-55b9-4508-ab8b-7cd87e1dd363

கல்வித்தகுதி : 

PGT பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பட்டம் பெற்றிருப்பதுடன் B.Ed. படித்திருக்க வேண்டும். அதாவது, Accountancy, Biology, Biotechnology, Business Studies, Chemistry, Computer Science, Economics, English Core, Home Science, Information Practices, Mathematics, Physical Education, Physics, Political Science, Psychology போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று, பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


TGT பணிக்கு சம்பந்தப்பட்டபாடத்தில் இளநிலைப் பட்டம் பட்டம் பெற்றிருப்பதுடன் B.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது, Computer Science, English, Hindi, Mathematics, Physical Education, Sanskrit, Science, SST போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் பயிற்சி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


PRT பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் B.Ed. பட்டம் அல்லது 2 வருட ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


பட்டப்படிப்பு மற்றும் B.Ed. படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேற்கண்ட கல்வித்தகுதியுடன் CET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CET/TET தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


வயதுவரம்பு:

பணி அனுபவம் இல்லாதவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 5 வருடத்திற்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை:

www.awesindia.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான பாடத் திட்டம், மதிப்பெண் விவரங்கள், தேர்வு நேரம் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் விண்ணபிக்க கடைசிநாள்: 25-10-2024


ஆன்லைனில் எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியிடப்படும் நாள் 12-11-2024


தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 10-12-2024


மேலும் முழுவிவரங்களுக்கு awesindia.com/pdf/2024/SEP இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.


அட்டவணை: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்

vikatan%2F2024-10-19%2Fk61segm5%2F2




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive