பள்ளிகளுக்கான வேலை நாட்கள் - ஆசிரியர்கள் வரவேற்பு
தமிழகத்தில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையில் திருத்தம் செய்து, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதற்கு, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்-ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுநிலை ஆசிரி-யர்கள் சங்க தலைவர் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கண்-ணப்பன் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசு பள்ளிகளுக்காக, பள்ளிக்கல்வித்துறை மூலம், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டி வெளியிட்டு கருத்து ஆலோ-சனை பெறப்பட்டது. இதனடிப்படையில், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்-வேறு ஆசிரியர் சங்கங்கள், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று, மீண்டும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளித்தும், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்கான வேலை நாட்களை, 210க்கும் குறையாமல் இருக்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் தொடர்புடைய விதிகள் அடிப்படையிலும் உரிய திருத்தங்களை செய்து பள்ளிகளுக்கான வேலை நாட்கள் அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றை வர-வேற்பதுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்-வித்துறை செயலாளருக்கு நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...